சுடச்சுட

  

  கும்பகோணத்தில் 2 கோயில்களில் கொடிமரங்கள் பிரதிஷ்டை

  By கும்பகோணம்  |   Published on : 30th January 2016 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணத்தில் நாகதோஷ பரிகார தலமாக விளங்கும் ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோயில் மற்றும் குருசந்திர தலம் எனப் போற்றப்படும் ஸ்ரீ வியாழசோமேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் வெள்ளிக்கிழமை கொடிமரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

  ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோயில் கொடிமரம் சிதிலமடைந்திருந்ததால், அந்த கொடிமரத்துக்கு பதிலாக ரூ. 3.60 லட்சத்தில் 43 அடி உயரத்தில் புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டுள்ளது. தேக்குமரத்தில் செய்யப்பட்ட இந்த கொடிமரத்தின் மேலே செப்புத்தகடு பொருத்தப்பட்டு, அதன் பிரதிஷ்டை விழா  கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இதேபோல், வியாழசோமேஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொடிமரத்துக்கு பதிலாக ரூ. 1 லட்சத்தில் 25 அடி உயரத்தில் கொடிமரம் உருவாக்கப்பட்டு, அதன் பிரதிஷ்டை விழா  நடைபெற்றது.

  இதை முன்னிட்டு இந்த இரு கோயில்களிலும் உள்ள மூலவர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, பிரதிஷ்டை நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai