சுடச்சுட

  

  திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் உள்ள கமலவள்ளி உடனுறை அப்பால ரெங்கநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

  இந்தக் கோயில் 108 திவ்ய தேசங்களில் 8-வது தலம். இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குடமுழுக்கு விழாவுக்காக ஜன. 26-ம் தேதி மாலை முதல் விழா தொடங்கி யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடர்ந்து, தளிகை அமுது கண்டருளல், வேத திவ்ய பிரபந்த பெரிய சாற்றுமுறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  இதில், ஸ்ரீரங்கம் ரெங்க நாராயண ஜீயர், அண்ணன் சுவாமிகள், வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள், மன்னார்குடி சென்டல் அலங்கார செண்பகமன்னார் ஜீயர், சென்னை இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (திருப்பணி) கவிதா, தஞ்சாவூர் இணை ஆணையர் சி. குமரதுரை, திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெத்தினசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai