உளுந்தில் நச்சு உயிரி நோய் :கட்டுப்படுத்த ஆலோசனை

உளுந்துப் பயிரில் ஏற்பட்டுள்ள நச்சு உயிரி நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் செயல்படுத்தவை குறித்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர்(பொ) முனைவர் வெ. ரவி தெரிவித்துள்ளார்.
உளுந்தில் நச்சு உயிரி நோய் :கட்டுப்படுத்த ஆலோசனை

உளுந்துப் பயிரில் ஏற்பட்டுள்ள நச்சு உயிரி நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் செயல்படுத்தவை குறித்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர்(பொ) முனைவர் வெ. ரவி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு- தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி மற்றும் பல பகுதிகளில் சித்திரைப் பட்டம் விதைப்பு செய்த உளுந்து பயிரில் மஞ்சல் தேமல் நோய் மற்றும் இலைப் பராமரிப்பு நோய் பரவலாகத் தென்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி உடன் அழித்து விட வேண்டும்.

மஞ்சள் பசைப்பொறியை வயல்களில் ஆங்காங்கே வைத்து இந்நோயைப் பரப்பும் பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கவும், தேவைப்பட்டால் மீதைல்டெமட்டான் 25 இ.சி 200 மிலி ஏக்கர் அல்லது டைமெத்தோயேட் 30 எஸ்.சி 200 மிலி ஏக்கர் அல்லது தயோமீத்தாக்சம் 75டபுள்யுடிஜி 40 கிராம் இமிடாக்க்ளோப்ரிட் 17.8 எஸ்.எல்-40 மிலி ஏக்கர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 15 நாட்கள் இடைவேளையில் இருமுறை தெளிப்பதன் மூலம் மேற்கண்ட நோய்களை பரப்பும் வெள்ளை ஈ மற்றும் அசுவினி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் முனைவர் வெ. ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com