கும்பகோணம் அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது.
சோழவள நாட்டில் நால்வரால் பாடல் பெற்றதும், வரலாற்று புகழுடையதும், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாக உள்ள இக்கோயிலில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் கடந்த 1972-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பின்னர் சுமார் 43 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் குடமுழுக்கு நடத்தப்படுகிறது.