Enable Javscript for better performance
பிரம்மசிரக்கண்டீசுவரர் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூரில் பிரம்மசிரக்கண்டீசுவரர் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா மே 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை பல்லக்கிலும், மாலை அபிஷேக ஆராதனையும், வாகனப் புறப்பாடும் நடைபெற்றது.

    இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தேரில் மங்களாம்பிகா சமேத பிரம்மசிரக்கண்டீசுவரர் எழுந்தருளினார். இதையடுத்து, நான்கு முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai