Enable Javscript for better performance
அனுமதியின்றி கொடி: காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் அனுமதியின்றி கட்சிக் கொடியைக் கட்டியதாகவும், பதாகைகள் வைத்ததாகவும் காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
    தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியின் மண்டல ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுன்டானா, நாஞ்சிக்கோட்டை சாலையில் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டன. மேலும், தலைவர்களை வரவேற்கும் விதமாக பதாகைகளும் வைக்கப்பட்டன.
    இவை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் மீது தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய போலீஸாரும், தஞ்சாவூர் தெற்கு போலீஸாரும்
    2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai