Enable Javscript for better performance
இருசக்கர வாகனம் - கார் மோதல்: இருவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் காயமடைந்தனர்.
    திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (22). அங்குள்ள கல்லூரியில் பி.ஏ., படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சேக் உசேன் (19) டி.எம்.இ. படித்துள்ளார். இருவரும் கும்பகோணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
    தஞ்சாவூர் -கும்பகோணம் பிரதான சாலையில் திருப்பாலைத்துறை கிராமம் அருகே சென்றபோது, எதிரே கோணுளாம்பள்ளம் கிராமத்திலிருந்து திருச்சி நோக்கி முகம்மது காசீம் (40) ஓட்டிச் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சையது இப்ராஹிம், சேக் உசேன் இருவரும் காயமடைந்தனர். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும், பிறகு தீவிரச் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai