Enable Javscript for better performance
"உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
    தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வார விழாவில் அவர் மேலும் பேசியது:
    தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி, நோயாளிகளுக்கான சிகிச்சை என அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் என்னென்ன வசதிகள் தேவையோ, அவற்றை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புதிய படிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மக்களிடம் இக்கல்லூரி மாணவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார் துரைக்கண்ணு. மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமை வகித்தார். தஞ்சாவூர் ஆவின் தலைவர் ஆர். காந்தி, கல்லூரி முதல்வர் எம். வனிதாமணி, மருத்துவக் கண்காணிப்பாளர் எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai