Enable Javscript for better performance
ஒட்டங்காடு ஊராட்சியில் வாரச்சந்தை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் வாரச்சந்தை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஒட்டங்காடு ஊராட்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மா. கோவிந்தராசு தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் குழ. சுந்தர்ராஜன், பேராவூரணி ஒன்றிய அதிமுக செயலாளர் உ. துரைமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாரச்சந்தையை தொடங்கி வைத்து சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராசு பேசுகையில், ஒட்டங்காடு ஊராட்சி மற்றும் அருகே உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. சந்தைக்கு திருச்சி, தஞ்சை போன்ற நகரங்களிலிருந்து வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள். அதை இந்தப் பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
    நிகழ்ச்சியில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.வி. திருஞானசம்பந்தம், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் எஸ்.எம். நீலகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai