Enable Javscript for better performance
சாலை விபத்தில் ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
    கபிஸ்தலம் காவல் சரகம், வீரமாங்குடி கிராமம் கணபதி நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன் (45). தொழிலாளி. இவர் கணபதியக்ரஹாரம் கடைவீதியிலிருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கும்பகோணம்-திருவையாறு பிரதான சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது சாலையோர தடுப்பில் மோதி பலத்த காயமடைந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாமிநாதன், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயரிழந்தார்.
    கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai