Enable Javscript for better performance
"நம் உரிமைகளைக் காப்பது அரசியலமைப்புச் சட்டம்'- Dinamani

சுடச்சுட

    

    நம்முடைய உரிமைகளைக் காப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
    இப்பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய அரசியலைமைப்பு நாள் விழாவுக்குத் தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:
    அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறதோ, அதை நிர்வகிப்பதுதான் இந்திய பாராளுமன்றமும், உச்ச நீதிமன்றமும். நம்முடைய உரிமைகளைக் கட்டிக்காப்பதுதான் இந்த அரசியலமைப்புச் சட்டம். இதை உருவாக்கிய அல்லது அதற்கு தலைமையேற்ற அண்ணல் அம்பேத்கரை நினைத்துப் பார்க்க வேண்டும்.
    ஆதிக்க உணர்வு மிக்கவர்கள் மிகுந்த நிலையில், அண்ணல் அப்பேத்கர்தான் இந்த உண்மையான மனித உரிமை, அனைவரும் சமம் என்பதையெல்லாம் சட்டத்திலே கொண்டு வந்து சட்டத்தின் ஆட்சிப்படி அது வர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார். இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் நம்பிக்கைத்தான் இன்று நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
    நம்மைக் கட்டிக் காக்கிற அரண் போன்றது இந்த அரசியலமைப்புச் சட்டம்.  
    எந்த ஒரு உரிமையையும் கோருவதாக இருந்தாலும் அதன் வழிதான் நாம் பாதுகாப்பைத் தேட முடியும். 110 ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, இந்தியா ஒரு சுதந்திர நாடாக வரும்போது இந்தியாவுக்கென்று தனியாகச் சட்டம் வகுக்கிறபோது அண்ணல் அப்பேத்கரின் அறிவுச் சிந்தனைகள் அதில் மிளிர்கிறது.
    அரசியலமைப்புக்காக 384 உறுப்பினர்களை கொண்ட சபைக் கூட்டப்பட்டது. இச்சபை இரு ஆண்டுகள் பதினொரு மாதங்கள் பதினெட்டு நாட்கள் கூடி அரசியல் அமைப்பு குறித்து விரிவாக விவாதித்து, 4,000-க்கும் அதிகமான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. 2800 திருத்தங்களை ரத்து செய்து விட்டு ஒரு முழுமையான அரசிலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவரது கையால் எழுதப்பட்டச் அந்தச் சட்டம் இன்றும் நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    இந்த அரசியல் அமைப்புச்சட்டம் 1949 ஆம் ஆண்டு நவ. 26-ம் தேதி கொடுக்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டு ஜன. 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது என்றார் துணைவேந்தர்.
    முன்னதாக, அரசியல் அமைப்பு சட்ட உறுதிமொழியைத் துணைவேந்தர் படிக்க, அவற்றை ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஏற்றனர்.
    வழக்குரைஞர்கள் பெ. சின்னசாமி, தியாக. காமராஜ் சிறப்புரையாற்றினர். பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் இரா. முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai