Enable Javscript for better performance
அஞ்சல் அலுவலர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை அஞ்சல் அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஒத்தை தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (58). இவர் வழுத்தூரில் உள்ள அஞ்சலகத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாவித்திரி. புதன்கிழமை காலை ராஜகோபால் வேலைக்கு சென்ற பின்னர், சாவித்திரி வீட்டருகே உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். விழா முடிந்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த தோடு, வளையல், சங்கிலி உள்பட 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai