Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம்: 20 மனுக்களுக்கு உடனடி தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் வட்டம் கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 20 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    முகாமுக்கு வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா, சமூக நல வட்டாட்சியர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அளிக்கப்பட்ட 39 மனுக்களில் 20 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 19 மனுக்கள் துறை ரீதியிலான பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ரங்கசாமி, கும்பகோணம் ஒன்றிய அதிமுக செயலாளரும், அரசு வழக்குரைஞருமான சோழபுரம் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai