Enable Javscript for better performance
இருசக்கர வாகனங்கள் திருட்டு குடந்தை நீதிமன்றத்தில் கேமரா பொருத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    இருசக்கர வாகனங்கள் திருட்டு குடந்தை நீதிமன்றத்தில் கேமரா பொருத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டை தவிர்க்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வழக்குரைஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    இச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 5-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் எம். ராஜசேகர் தலைமை வகித்தார். இதில், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகளின் வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்துவது, கடந்த சில தினங்களாக இவ்வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளதால், காவல்துறை மூலம் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த நீதித்துறை நடுவர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai