Enable Javscript for better performance
இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் 14 பவுன் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் விளார் சாலை அன்பு நகரைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஆனந்தி (45). இவர் வெள்ளிக்கிழமை காலை அருளானந்த நகரிலிருந்து நாஞ்சிக்கோட்டைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இவரது கழுத்தில் இருந்த இரு தங்கச் சங்கிலிகளைப் பறித்தனர்.
    அப்போது, ஒரு சங்கிலியை ஆனந்தி பிடித்துக் கொண்டார். என்றாலும் மர்ம நபர்கள் பாதி சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் மூன்றே முக்கால் பவுன் பறிபோனது.
    இதுகுறித்து தெற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
    இதேபோல, திருக்காட்டுப்பள்ளி தர்மாம்பாள் நகரைச் சேர்ந்த சுரேஷ் மனைவி வீரஉமையாள் துர்கா (27) தனது குழந்தைகள், மாமியாருடன் தெற்குவாடித் தெருவில் வியாழக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், வீரஉமையாள் துர்காவின் கழுத்தில் இருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
    இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai