Enable Javscript for better performance
ஓய்வூதியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க கோரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேராவூரணி வட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 33-வது ஆண்டு நிறைவு விழா மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மாநாட்டுக்கு வட்டாரத் தலைவர் ஆர். தங்கராசு தலைமை வகித்தார். செயலாளர் எம். யூசுப் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வி. கோவிந்தன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். துணைச் செயலாளர் ஆர். சாமியப்பன் தீர்மானங்களை முன்மொழிந்தார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் கோ. லெட்சுமிகாந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
    மாநாட்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன் வழங்கிய அரசாணையின் முழுப்பயனையும் ஓய்வூதியர்கள் பெற ஆவன செய்ய வேண்டும். பழைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதோடு, உதவித்தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். சென்னையில் உள்ளது போல அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வூதியர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மாநாட்டில் பாரத் கல்வி குழுமத் தலைவர் புனிதாகணேசன், ஓய்வூதியர் சங்க முன்னாள் தலைவர் கே.வி. கிருஷ்ணன், லெட்சுமி விலாஸ் வங்கி கிளை மேலாளர் பி. கார்த்திக்செல்வம், புலவர் சு. போஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai