Enable Javscript for better performance
கோவை சசிக்குமார் கொலை வழக்கில் காவல் துறை ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது : பாஜக மாநில பொதுச் செயலா- Dinamani

சுடச்சுட

    

    கோவை சசிக்குமார் கொலை வழக்கில் காவல் துறை ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது : பாஜக மாநில பொதுச் செயலாளர் பேட்டி

    By DIN  |   Published on : 08th October 2016 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் அண்மையில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசும், காவல் துறையும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்றார் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்.
    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மாவட்டத் தலைவர் ராஜா, முன்னாள் தலைவர் பழ.அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்க வந்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அளித்தப் பேட்டி:
    கர்நாடகத்திலிருந்து உரிய நீரை தமிழகத்துக்கு பெற்றுத் தரவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக பாஜக குழு அமைத்துள்ளது. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அந்த குழுவினர் அக். 8 அல்லது 9 -ம் தேதி புதுதில்லியில் பிரதமரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
    தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். திமுக பலமுறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அதேபோல் மத்தியிலும் ஆட்சியில் பங்கேற்றது. அப்போது தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் தற்போது போராட்டம் நடத்துகின்றனர். மேலும் அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் ஆற்றில் தடுப்பணைகள் கட்டவும், மணல்கொள்ளையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு நன்மை செய்ய தனிக்கவனம் செலுத்தி வருகிறது. பிரதமரின் அனைத்து திட்டமும் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது. அத்தகைய பாஜக அரசை தமிழக அரசு குறைகூறுவது வன்மையாக கண்டிக்கதக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை. காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் கொலை செய்யப்பட்டதையடுத்து அப்பாவி இந்துக்கள் 400 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். காவல் துறையும், தமிழக அரசும் அவர்கள் மீது மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தெரிகிறது. இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டு வருகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai