Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செல்லிடப்பேசி கோபுரத்தில் வெள்ளிக்கிழமை ஏறி போராட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் செல்லிடப்பேசி கோபுரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலர் அய்யாக்கண்ணு, பொருளாளர் காசிநாதன், ஒன்றியச் செயலர்கள் கணேசன், பழனிவேல் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை ஏறினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 4 பேரையும் கீழே இறங்கச் செய்து கைது செய்தனர்.
    மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து பழைய பேருந்து நிலையப் பகுதியில் அக்கட்சியின் கொடியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலர் பிரபு தலைமையில் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ், தமிழர் படை அமைப்பாளர் ஆதவன் உள்பட 6 பேர் எரிக்க முயன்றனராம். இதை போலீஸார் தடுத்து நிறுத்தி 6 பேரையும் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai