Enable Javscript for better performance
தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் ஆயுஷ்ய ஹோமம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் ஆயுஷ்ய ஹோமம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் எம்எல்ஏ சி.வி. சேகர் சார்பில் ஆயுஷ்ய ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த ஹோமம் 10 மணி வரை நடைபெற்றது. இதையொட்டி நாடியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
    பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசன், முன்னாள் எம்எல்ஏ பி.என். ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதா ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவர்
    எஸ்.ஆர். ஜவஹர்பாபு, அதிமுக மாவட்ட முன்னாள் செயலர் ஆர். கார்த்திகேயன், பட்டுக்கோட்டை நகரச் செயலர் சுப. ராஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் துரை. செந்தில், பி. சுப்பிரமணியன்,
    துரைமாணிக்கம், குழ. சுந்தரராஜன், சத்தியமூர்த்தி, மாவட்ட ஜெ.பேரவைத் தலைவர் உதயகுமார், நகர இலக்கிய அணிச் செயலர் அ. பூவலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai