Enable Javscript for better performance
தேவராயன்பேட்டையில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகேயுள்ள தேவராயன்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.
    முகாமுக்கு ஊராட்சித் தலைவர் அம்பிகா சாமிநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தனலெட்சுமி முன்னிலை வகித்தார்.
    முகாமில் பாபநாசம் வட்டாட்சியர் எஸ். திருமால், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், தனி வட்டாட்சியர் மலர்குழலி, வருவாய் அதிகாரி ப்ராங்ளின் உள்ளிட்ட குழுவினர் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட 38 கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கலந்து கொண்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான தீர்வு ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கிப் பேசினார்.
    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வைத்தியநாதன் (வட்டார வளர்ச்சி), ஜெகதீசன் (கிராம ஊராட்சிகள்), தலைமை அளவையர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் எ. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai