Enable Javscript for better performance
தொடக்கக் கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தொடக்கக் கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகேயுள்ள உதவித் தொடக்கக் கல்வி ஊரகப் பகுதி அலுவலகம் முன் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர் ஊரகப் பகுதியில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இதுவரை ஊதியம் பட்டுவாடா செய்யப்படவில்லையாம். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தாமதமாவதாகவும், அக். 13-ம் தேதி ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த ஆசிரியர்கள் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகேயுள்ள உதவித் தொடக்கக் கல்வி ஊரகப் பகுதி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாலை அமர்ந்து காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனர். தகவலறிந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஜி. ரெங்கநாதன், மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாதத்தின் கடைசி நாளான 30 அல்லது 31-ம் தேதி ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai