Enable Javscript for better performance
வெட்டாற்றில் அழுகிய நிலையில் சிறுவன் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை மாலை வெட்டாற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    பாபநாசம், திருக்கருகாவூர் கால்நடை மருத்துவமனை அருகே வெட்டாற்றின் நடுவிலுள்ள நாணல் புதரில் அழுகிய நிலையில் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலம் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் கண்டனர். இதுகுறித்து திருக்கருகாவூர் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை
    மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai