Enable Javscript for better performance
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்புத் துறையால் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் துணை இயக்குநர் கு. கலைச்செல்வன் தெரிவித்தது:
    வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்ளவும், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கவும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம் வேலைவாய்ப்பு துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 100-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 150-ம், மேல்நிலைக் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ரு. 200-ம், பட்டயக் கல்வித் தகுதிக்கு ரூ. 300-ம் அரசால் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
    இத்திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சியின்மை, தேர்ச்சி, மேல்நிலைக் கல்வி மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் செப். 30-ம் தேதி நிலையில் 45 வயதையும், இதர வகுப்பினர் 40 வயதையும் கடந்தவராக இருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000-க்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் ட்ற்ற்ல்ள்:ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
    நிறைவு செய்த விண்ணப்பப் படிவத்தில் பக்கம் 7-ல் வருவாய் ஆய்வாளரின் ஒருங்கிணைந்த சான்று, புகைப்படம், மனுதாரர் பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், அனைத்து கல்விச்சான்றுகள் நவ. 30-ம் தேதிக்கு முன்பாக அலுவலக வேலை நாளில் நேரில் அளித்து பயன்பெறலாம்.
    மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதிகள்இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவின் காத்திருப்பு காலம் ஓராண்டு மட்டுமே. அதாவது 30.09.2015 வரை பதிவு செய்துள்ளவர்கள், பத்தாம் வகுப்பு அதற்கும் கீழ் ரூ.600-ம், மேல்நிலைக் கல்வித்தகுதி ரூ. 750-ம், பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு ரூ. 1000-ம் உயர்த்தப்பட்ட தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆண்டு வருமானத்தில் உச்ச வரம்பு கிடையாது. வருவாய் அலுவலரின் சான்று அளிப்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai