Enable Javscript for better performance
அக். 17, 18-ல் ரயில் மறியல் போராட்டம்: தஞ்சாவூரில் விவசாய, வணிகர் சங்கங்கள் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    அக். 17, 18-ல் ரயில் மறியல் போராட்டம்: தஞ்சாவூரில் விவசாய, வணிகர் சங்கங்கள் ஆலோசனை

    By DIN  |   Published on : 15th October 2016 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, வரும் 17, 18-ம் தேதிகளில் மாநில அளவில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 கி.மீ. தொலைவுக்கு இருப்புப் பாதையில் 48 மணிநேரம் அமருவது என முடிவு செய்யப்பட்டது.
    தஞ்சாவூரில் இப்போராட்டம் தொடர்பாக பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
    வரும் 17,18 தேதிகளில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தின்போது,  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி 60 கி.மீ. தொலைவுக்கு இருப்புப் பாதையில் அமர்ந்து 48 மணிநேர மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலர்கள் துரை. சந்திரசேகரன் (திமுக), கோ. உதயகுமார் (மதிமுக), ஆர். மனோகரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இரா. திருஞானம் (இந்திய கம்யூனிஸ்ட்), சொக்கா. ரவி, தமிழருவி, கோட்டை. அரசமாணிக்கம் (விடுதலைச் சிறுத்தைகள்), மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், தேமுதிக மாநகரச் செயலர் எஸ்.எஸ். அடைக்கலம், தமாகா மாநகர மாவட்டத் தலைவர் குணசேகரன், வணிகர் சங்கப் பேரவை மாவட்டத் தலைவர் எம். கணேசன் உள்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai