Enable Javscript for better performance
கீழணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி  அணைக்கரையில் விவசாயிகள் மறியல்: 70 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கீழணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி  அணைக்கரையில் விவசாயிகள் மறியல்: 70 பேர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அணைக்கரையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 70 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
    கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து வடவாறு, தெற்குராஜன் வாய்க்கால், வடக்குராஜன் வாய்க்கால், குமுக்கிமண்ணியாறு, சேத்தியாதோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் மூலம் 1,32,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
    இந்நிலையில், கொள்ளிடம் கீழணை பாசனப் பகுதிக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் அணைக்கரையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் டி. விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கும்பகோணம் - சென்னை சாலையில் அணைக்கரையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai