Enable Javscript for better performance
குடந்தை கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடந்தை கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் கல்வி மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் பாணாதுரை மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில்  வெள்ளிக்கிழமை தொடங்கின.
    இப்போட்டிகளை அரசு குழுமத்தின் தலைவர்  ஆர். திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார்.  சிறியமலர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எல். ராபர்ட்செல்வன் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி. ராஜேந்திரன், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.  இதில் தொடர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் வட்டங்களைச் சேர்ந்த 105 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15-ம் தேதி பரிசும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai