Enable Javscript for better performance
கோவிலாச்சேரி கிராமத்தில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் வட்டம், கோவிலாச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் பயனாளிகள் திட்டமான அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், சமூக நல வட்டாட்சியர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    முகாமில் அரசு வழக்குரைஞர் சோழபுரம் அறிவழகன், அதிமுக நிர்வாகி கமல்ராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    முகாமில் மொத்தம் 17 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. எஞ்சிய 12 மனுக்கள் பரிசீலனைக்காக அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai