Enable Javscript for better performance
தாராசுரத்தில் பாஜக செயற்குழு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தாராசுரம் பேரூர் மண்டல பா.ஜ.க. செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு பேரூர் மண்டல தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் அய்யாரப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் பக்தர்களின் சாதாரண வழிபாட்டு முறைக்கு நிர்வாக செயல் அலுவலரால் இடையூறு ஏற்படுவதை களைய வேண்டும்.
    தாராசுரத்தில் தூர்வாரப்படாத குளங்கள் சுத்தம் செய்யப்பட்டு குளங்களை சுற்றி மரக்கன்று நடவேண்டும். தஞ்சை தேவஸ்தானம் தாராசுரத்தில் உள்ள பல வீடுகளுக்கு விதித்துள்ள வாடகை பாக்கி 15 ஆண்டுகள் நிலுவைத்தொகையை உடனே செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தளர்த்தி 10 ஆண்டுகளை தள்ளுபடி செய்து மீதமுள்ள 5 ஆண்டுகள் மட்டும் உள்ள நிலுவைத்தொகையை மட்டும் சுலப தவணை முறையில் வசூல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai