Enable Javscript for better performance
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்

    By DIN  |   Published on : 15th October 2016 01:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    agric

     

    பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகைதாரர்கள் உள்பட அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம் என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
    தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இத்திட்டம் குறித்த மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:
    பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தில் அனைத்து முக்கியமான உணவு பயிர்கள், எண்ணெய் வித்துகள், ஆண்டு தோட்டக்கலை வணிகப் பயிர்களைக் காப்பீடு செய்யலாம். குத்தகைதாரர்கள் உள்பட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம். இத்திட்டத்தில் பங்கு பெறும் விவசாயிகள் கண்டிப்பாக வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.   இத்திட்டத்தில் உணவு பயிர் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு காரிப் பருவத்துக்கு 2 சதமும், ராபி பருவத்துக்கு 1.5 சதமும், காரிப், ராபி ஆகிய இரு பருவங்களில் காப்பீடு செய்யும் ஆண்டு வணிக மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு அதிகபட்சம் 5 சதமும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

    பாதகமான பருவ மாற்றங்களால் பயிர் விதைக்க இயலாத காலங்கள், வெள்ளம் மற்றும் வறட்சியால் ஏற்படும் இடைக்காலப் பாதகமான நிலை, அறுவடைக்கு பின் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளை இக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈடு செய்யலாம். விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலர்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவன அலுவலகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ். சுப்பிரமணியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் இரா. கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai