Enable Javscript for better performance
பேராவூரணியில் விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி, பேராவூரணியில் வியாழக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
    ஆண்டுதோறும் இந்நாளில் மாவட்டம் முழுவதும் பேரிடர் இன்னல்கள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பேராவூரணியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டாட்சியர் தங்கபிரபாகரன் தலைமை வகித்தார். நீலகண்டப்பிள்ளையார் கோயிலிலிருந்து தொடங்கிய பேரணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் சமூக பாதுகாப்புதிட்ட தனி வட்டாட்சியர் கோபி, துணை வட்டாட்சியர் பூவந்திநாதன், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தகுமாரி, தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ரெத்தினவேல் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai