Enable Javscript for better performance
விவசாயியைத் தாக்கிய மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    விவசாயியை உருட்டுக் கட்டையால் தாக்கிய மூவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
    தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியைச் சேர்ந்தவர் எம். அந்தோணிசாமி (54). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ்மேரிக்கும் தொடர்பு இருப்பதாக அல்போன்ஸ்மேரியின் கணவர் ஆரோக்கியசாமிக்கு (38) சந்தேகம் ஏற்பட்டது.
    இதுதொடர்பாக அந்தோணிசாமிக்கும், ஆரோக்கியசாமிக்கும் 2014, ஆக. 2-ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், அந்தோணிசாமியை ஆரோக்கியசாமி, இவரது சகோதரர் செல்வராஜ் (35), உறவினர் ஜான்சன் (19) ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் பலத்தக் காயமடைந்த அந்தோணிசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
    இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து ஆரோக்கியசாமி, செல்வராஜ், ஜான்சன் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆர். சதீஷ்குமார் வாதிட்டார்.  விசாரணையின் நிறைவில்,  ஆரோக்கியசாமி, செல்வராஜ், ஜான்சன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும், அபராதத் தொகையில் ரூ. 1 லட்சத்தை அந்தோணிசாமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கூறி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்  நீதிபதி எஸ். கார்த்திகேயன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai