கும்பகோணத்தில் உள்ள வாள்முனீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முனீஸ்வரரை வழிபட்டனர்.
பழைய பாலக்கரை சுவாமிமலை பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு வாள்முனீஸ்வரர் திருக்கோயில் மிகப் பழைமையான கோயிலாகும்.
இக்கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்டு அதன் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
தொடர்ந்து மகாதீபாரதனை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முனீஸ்வரர் சுவாமியை வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு புதன்கிழமை (ஜூன் 7) மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடுடன தொடங்கிய பூர்வாங்க பூஜையில் கலச வழிபாடு, யாகபூஜை, ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் யாகபூஜை ஹோமம், விசேஷ திவ்ய ஹோமமும், காலை 7.45 மணிக்கு மேல் மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து யாத்ராதான பூஜையையடுத்து கடங்கள் புறப்பட்டு காலை 8 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.