மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் போலீஸாரால் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற ராகுல் காந்தியை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் மறியல் செய்வதற்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் வியாழக்கிழமை மாலை ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
இதில், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் நாஞ்சி கி. வரதராசன், செங்குட்டுவன், துணைத் தலைவர் பழனிவேல், பொருளாளர் ஆர். பழனியப்பன், மகிளா காங்கிரஸ் சித்ரா சுவாமிநாதன், ரேவதி ஷாக்கிலோ, விவசாய பிரிவு கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களை போலீஸார் வழிமறித்து, 20 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.