மாட்டிறைச்சி தடைச் சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் ஏஐடியுசி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாட்டிறைச்சி தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மாடு வாங்க - விற்க உள்ள தடையை நீக்க வேண்டும். ஜனநாயக முறையில் போராடுகிற அமைப்பினரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் ஜனநாயக விரோதச் செயலை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
விவசாயத்தைப் பாதுகாக்கப் போராடுகிற கதிராமங்கலம் மக்கள் மீதான அடக்கமுறையைக் கைவிட வேண்டும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான மருத்துவர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாநிலச் செயலர் சி. சந்திரக்குமார் தொடக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் வெ. சேவையா, பொருளாளர் தி. கோவிந்தராஜன், துணைச் செயலர் துரை. மதிவாணன், பட்டு கைத்தறி மாவட்டச் செயலர் கோ. மணிமூர்த்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் க. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.