ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தம்பியய்யா மகன் சுரேஷ்குமார் (36). இவரை கடந்த 8-ம் தேதி திருவோணத்தில் நடைபெற்ற பூச்சொரிதல் நிகழ்ச்சியில் திருவோணம் பகுதியைச் சேர்ந்த துரை, சிவா மற்றும் இவரது நண்பர்கள் தாக்கினராம். இதுகுறித்து திருவோணம் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார்.இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் விரோதம் இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவைப் பார்க்க வந்த கீழமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர்களை திருவோணம் துரை, சிவா மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினராம். இதில், கீழமேட்டுப்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார் (23), காளிஸ்வரன் (22), விக்னேஷ் (14) உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.
மேலும் சுரேஷ்குமார் வீடு உள்பட 5 வீடுகள் சேதமடைந்தன. இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், துரை, சிவா, இவர்களது நண்பர்கள் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.