பட்டுக்கோட்டை ஐ.டி.ஐ.-ல் சேர விண்ணப்பிக்கலாம்

பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) சேர விண்ணப்பிக்கலாம் என நிலைய முதல்வர் பி. மாலா தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) சேர விண்ணப்பிக்கலாம் என நிலைய முதல்வர் பி. மாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
பட்டுக்கோட்டையில் முத்துப்பேட்டை சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்த நிலையத்தில் 2017-18 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய கைவினைஞர் பயிற்சிகளுக்கான (என்.சி.வி.டி.) சேர்க்கை நடைபெறுகிறது. எலக்டிரிசியன், கணினிப் பயிற்சி, உணவாக்கத் தொழில்நுட்பம், தையல் தொழில்நுட்பம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி பத்தாம் வகுப்போ, 12-ம் வகுப்போ, ஏதாவது பட்டப்படிப்போ, பட்டயப் படிப்போ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், தையல் தொழில்நுட்பப் பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. பயிற்சி முடித்தவுடன் அகில இந்திய கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் மூலம் தேசிய தொழில் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஆதிதிராவிட நலத் துறையின் கீழ் உதவித்தொகை பெற்றுத் தரப்படும். 50% இட ஒதுக்கீடு உண்டு. பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். 14- 40 வயது வரை உள்ள ஆண், பெண் சேரலாம். மேலும் தகவலுக்கு 04373 - 236806, 94872 52209 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com