நவ. 29-இல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: தஞ்சையில் சீரமைக்கப்படும் சாலைகள்

தஞ்சாவூரில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாநகரில் சில சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.
Updated on
1 min read

தஞ்சாவூரில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாநகரில் சில சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நவ. 29-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாநகரில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சில சாலை சீரமைப்புப் பணிகளும் நடைபெறுகின்றன.
குறிப்பாக, விழா நடைபெறும் மைதானத்தையொட்டி, கலைஞர் நகருக்குச் செல்லும் சாலையில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை கரடு, முரடாகவே இருந்து வந்த இச்சாலை வழியாக கலைஞர் நகர், ரஹ்மான் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லலாம். நகரப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தாலும் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருந்தது.
நூற்றாண்டு விழாவையொட்டி சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பில் இச்சாலை அமைக்கப்படுகிறது. இரண்டு கி.மீ. தொலைவில் 3.75 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இச்சாலையில் மழை நீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர். இதேபோல, மாநகரில் காந்தி - இர்வீன் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரையிலான கல்லணைக் கால்வாய் சாலை புதுப்பிக்கப்படவுள்ளது. இதேபோல, மாநகரில் பள்ளங்களை நிரப்பும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், விழா நடைபெறும் மேடைக்குச் செல்லும் சாலையும் சீரமைக்கப்படவுள்ளது.
அருகில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக மின் விளக்குகள், கழிப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் போன்றவை அமைக்கப்படவுள்ளன.
மேலும், இந்நிலையத்தில் நீண்ட காலமாக வடிகால் பிரச்னையால் கழிவு நீர் தேங்குகிறது. இதற்குத் தீர்வு காண்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com