தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை பிற்பகல் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி வியாழக்கிழமை பிற்பகல் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருக்கானூர்பட்டி பகுதியில் சென்ற இப்பேருந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள பால சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது, பாலச் சுவரில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பி. சவரிமுத்து (70), பேருந்தில் பயணம் செய்த காங்கேயத்தைச் சேர்ந்த எம். கோவிந்தராஜ் (42), கன்னியாகுமரி மாவட்டம், தூண்டிவிளையைச் சேர்ந்த பி. சுந்தர்ராஜ் (63), தஞ்சாவூர் சங்கரப்பவாத்தியார் சந்தைச் சேர்ந்த எம். தருண்குமார் (18) ஆகியோர் காயமடைந்தனர். நால்வரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சவரிமுத்து உயிரிழந்தார்.
காரை ஓட்டிச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்துக்கு உள்பட்ட வேங்கடகுளத்தைச் சேர்ந்த எம். எழில் (46) அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து வல்லம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.