தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கைவினைஞர்களின் விவரங்களைச் சேகரிக்க செப். 9-ஆம் தேதி முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கு. அருண் தெரிவித்திருப்பது-
தமிழகக் கைவினைஞர்களுக்காகwww.tnartisaan.com என்ற இணையதளத்தைத் தொடக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்கள் தங்களுடைய சுய தகவல்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்ய செப். 9-ம் தேதி அவர்களுடைய விவரங்களைச் சேகரிக்க முகாம்கள் ந டைபெறவுள்ளன.
மாவட்டத்தில் தஞ்சாவூர் நாணயக்காரச் செட்டித் தெருவில் உள்ள ராமலிங்க சுவாமிகள் ம டால யம், சுவாமிமலை பூம்புகார் உலோக சிற்பங்கள் உற்பத்தி நிலையம், நாச்சியார்கோயில் பூம்புகார் பித்தளை விளக்கு ம ற்றும் வெண்கல உலோக உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களில் காலை 10 ம ணி முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்யலாம். இதில், அனைத்து விவரங்களையும் நிறைவு செய்து கொடுப்பவர்களுக்கு அடை யாள அ ட்டை வழங்கப்படும்.
கைவினைஞர்கள் 2017-ல் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், தங்களது ப டைப்பின் வண்ணப் புகைப்படம் (அஞ்சல் அ ட்டை அளவு) ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.