சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கு.முருகேசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வே. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பிரபாகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து உதவி இயக்குநர் கு.முருகேசன் பேசுகையில், மழைக்காலம் தொடங்கிவிட்டதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்பாராத மழைக்கால பேரிடர் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தரவேண்டும். காய்ச்சல் நோய் வராமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரப்பணிகளில் ஊராட்சி செயலாளர், மருத்துவ அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறங்களை சுகாதாரமற்ற வகையில் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் டேனியல் மருத்துவத் துறை, மின்வாரியத் துறை, கல்வித் துறை, ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.