கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களுக்கு எதிராக கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில், விவசாயம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நாடு பின்தங்கியுள்ளதாகவும், இப்பிரச்னைகளை மக்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் செப். 1-ம் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது.இதன்படி, கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தென்பகுதி பயண குழுச் சார்பில் வியாழக்கிழமை நடைபயண இயக்கம் நடைபெற்றது.
இதில், கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் மு.அ. பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை கும்பகோணம் காந்தி பூங்கா பகுதியில் வட பகுதி பயண குழு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.