தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள குறை தீர் நாள் கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12-ஆம் தேதி காலை 10.30 மணி க்கு நடைபெறவுள்ளது.
இதில், முன்னாள் படைவீரர்கள் ம ற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தங்களது குறைகளை ம னுக்கள் மூலம் அளிக்கலாம். மனுக்களுடன் முன்னாள் படைவீரர் அடையாள அ ட்டையின் நகலை இணைக்க வேண்டும்.
இக்கூட்டத்துக்குப் பிறகு தொழில்முனைவோர் கருத்தரங்கம் ந டைபெறவுள்ளது. இ தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அ லுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுயதொழில் திட்டங்கள் குறித்தும் அது தொடர்பான மானியங்கள் குறித்தும் எடுத்துரைக்கவுள்ளனர். இக்கூட்டங்களில் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.