தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் வியாழக்கிழமை மாலை மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம் செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். முதல்வர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமன் விலக வேண்டும். கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பன உ ள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, மாணவி அனிதா படம் முன் மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில், பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் தலைமைக் குழு உறுப்பினர் பழ. ராசேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நகரத் தலைவர் வாசுதேவன், உழவர் உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் சீ. தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.