முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கரந்தை கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா
By DIN | Published On : 03rd February 2017 05:54 AM | Last Updated : 03rd February 2017 05:54 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்பர் பாடிய இத்தலம் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு முற்பட்டது.
மேலும், அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், குடமுழுக்கு விழா ஜன. 27-ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது.
ஜன. 28-ஆம் தேதி நவக்ரஹ ஹோமம், 29-ஆம் தேதி சூக்த ஹோமம், 30-ஆம் தேதி முதல் கால யாக பூஜை, 31-ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், பிப். 1-ஆம் தேதி நான்காம், ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து, வியாழக்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைகள் முடிவடைந்த பிறகு 9.45 மணியளவில் விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், சுவாமி, அம்பாள் கருவறை குடமுழுக்கும் நடைபெற்றன.
மாலையில் மகா அபிஷேகமும், இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றன.