விக்கிபீடியா போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தமிழ்ப் பல்கலை. கண்காணிப்பாளர்

விக்கிபீடியா நடத்திய விக்கிகோப்பை போட்டியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் பி. ஜம்புலிங்கம் மூன்றாமிடம் பெற்றார்.
Published on
Updated on
1 min read

விக்கிபீடியா நடத்திய விக்கிகோப்பை போட்டியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் பி. ஜம்புலிங்கம் மூன்றாமிடம் பெற்றார்.
தமிழ் விக்கிபீடியா நிறுவனம் ஜனவரி மாதம் விக்கி கோப்பை போட்டி நடத்தியது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் 31-ஆம் வரை நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்ப் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் பி. ஜம்புலிங்கம் 253 பதிவுகளைப் பதிவு செய்தார்.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், விக்கிபீடியாவில் இல்லாத கோயில்கள், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலுள்ள கோயில்கள், வைப்புத் தலங்கள் பட்டியலை முழுமையாக்கல், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள், அறிஞர்கள் அறிமுகம் போன்றவற்றை பதிவு செய்தார். இதன்மூலம், இப்போட்டியில் அவர் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இதுகுறித்து ஜம்புலிங்கம் தெரிவித்தது:
இலக்கின் அடிப்படையில் எழுதத் தொடங்கியபோது தினமும் இரு பதிவுகளாவது எழுத வேண்டும் எனத் திட்டமிட்டேன். முதல் மூன்று நாள்களுக்குள் 20 பதிவுகளுக்கு மேலாக எழுதும் நிலை அமையவே அதே வேகத்துடன் தொடர்ந்தேன். சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு, ஏழு என எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது.
முதலில் அருகிலுள்ள மாவட்டங்களிலுள்ள கோயில்களைப் பற்றிய பதிவுகளைத் தொடங்கி பின்னர் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ளவற்றைப் பற்றி எழுதினேன் என்றார் ஜம்புலிங்கம். இவர் ஏற்கெனவே, 2015ஆம் ஆண்டில் முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.