Enable Javscript for better performance
"அகண்ட அலைவரிசை சந்தாதாரர்கள் பொதுவான கடவுச்சொல்லை தவிர்ப்பது அவசியம்'- Dinamani

சுடச்சுட

    

    "அகண்ட அலைவரிசை சந்தாதாரர்கள் பொதுவான கடவுச்சொல்லை தவிர்ப்பது அவசியம்'

    By DIN  |   Published on : 04th October 2017 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகண்ட அலைவரிசை உபயோகிக்கும் சந்தாதாரர்கள் பொதுவான கடவுச்சொல்லைப் (பாஸ்வேர்டு) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பி.எஸ்.என்.எல். தஞ்சாவூர் கோட்ட முதன்மைப் பொது மேலாளர் சி.வி. வினோத் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
    அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு சார்ந்த தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் பணிபுரிவோர், அறிமுகம் இல்லாத, முகாந்திரமில்லாத மற்றும் சந்தேகம் உள்ள முக நூல் மற்றும் இணையதளங்கள் மூலம் பதிவிறக்கமோ, திறக்கவோ, சேமித்து வைக்கவோ வேண்டாம். தகவல் குறிப்புகளுக்குள்ளோ அல்லது முகநூல் தகவலுக்குள்ளோ இணையதள முகவரி இருந்தால், அதைத் திறந்து படிக்கவோ, இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம்.
    அலுவலக மின் அஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி பிளாக்ஸ், குரூப்ஸ், சமூக வலைதளங்களுக்கு சந்தா செலுத்த வேண்டாம். முக நூல் முகவரியைத் திறக்காமல் இருக்கவோ, அதை உகந்த முறையில் லாக் அவுட் செய்திருக்கவோ கூடாது.
    மின் அஞ்சல் முகவரியை இயன்றவரை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாம். தேவைப்படும் பட்சத்தில் பொது உபயோகத்துக்கு உரிய மின் அஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்தலாம். சந்தேகப்படும்படியான மின் அஞ்சலை பதிவிறக்கம் செய்து அடுத்தவர்களுக்கு அனுப்ப வேண்டாம். பொது நல நிமித்தமான முக நூல் முகவரியை மட்டும் பிரபலப்படுத்த வேண்டும் பட்சத்தில் செய்யலாம்.
    அகண்ட அலைவரிசை உபயோகிக்கும் சந்தாதாரர்கள் தங்களுடைய மோடமில் லாக் இன் செய்வதற்கு, உபயோகிக்கும் பிரவுசரில் 192.1681.1 என்ற இணையதள முகவரியின் உள்ளே சென்று பொதுவாக இருக்கும் உபயோகிப்பாளர்:
    அட்மின், கடவுச்சொல்: அட்மின் என டைப் செய்து லாக் இன் ஆகலாம். கணினி ஓரளவு தெரிந்த நபரைக் கொண்டு பொதுவான கடவுச்சொல் அட்மின் என்பதை வேறு ஏதேனும் ஒரு கடவுச்சொல்லாக மாற்ற வேண்டும்.
    இதுபற்றிய மேலும் சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை அணுகலாம். கடவுச்சொல்லை மாற்றம் செய்ய வேண்டியது மிக முக்கியமானது. புதிய கடவுச்சொல்லை பதிவிடும்போது பெயர், குடும்பத்தினரின் பெயர், பிறந்த தேதி, திருமண நாள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai