Enable Javscript for better performance
அதிராம்பட்டினம் அருகே புகை மருந்து அடிக்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை ஊராட்சிப் பகுதிகளில்   கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது .
    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை, ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் இப்பணி நடைபெற்றது.
    ஏரிப்புறக்கரை ஊராட்சியைச் சேர்ந்த பிலால் நகர், ஆதம் நகர், மேலத்தெரு சானாவயல் உள்ளிட்ட பகுதிகளில்  சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், ஏரிப்புறக்கரை ஊராட்சி செயல் அலுவலர் கலா ஆகியோர் மேற்பார்வையில்,
    சுகாதார களப்பணியாளர்கள் கொசு மருந்து கருவியைக் கொண்டு  கொசு ஒழிப்புக்கான புகை மருந்தை அடித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai