Enable Javscript for better performance
அதிரை கடற்கரைத்தெரு தர்ஹா கந்தூரி ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தர்ஹாவின் 578-ம் ஆண்டு கந்தூரி விழா ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
     விழா கமிட்டியினர் முன்னிலையில், ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தர்ஹாவிலிலிருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம் புறப்பட்டது. இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட  பூ பல்லக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட  ரதம் மற்றும் மேளதாளங்கள், நாட்டியக் குதிரைகள் இடம் பெற்றன.
    ஹாஜா நகர், கிழக்கு கடற்கரைச்சாலை, புதுத்தெரு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு, பெரிய நெசவுக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், அங்கிருந்து அதிரை பேருந்து நிலையம், தரகர் தெரு, பெரிய தைக்கால் தெரு வழியாக மீண்டும் தர்ஹாவை வந்தடைந்தது.
    பின்னர் இரவு அங்கு சிறப்பு பிரார்த்தனையுடன் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.  
    அக்.31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சந்தனக்கூடு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
    ஏற்பாடுகளை கந்தூரி விழாக் கமிட்டியினர் என்.எம்.சாகுல் ஹமீது, ஜி.பசூல்கான், ஜெஹபர்அலி, லியாகத் அலி, ஜெஹபர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai