Enable Javscript for better performance
திருப்பணிக் குழு ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பளப்பாடி கிராமத்தில் உள்ள ஆனந்தவள்ளி உடனுறை நிலாவனை மகாதேவர் ஆலய திருப்பணிக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு,  டி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி ராமதாஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கோயில் திருப்பணி வேலைகள் மதில் சுவர் கட்டுதல், விமான வர்ணம் பூசுதல், மின்சார வசதி, தண்ணிர் வசதி  உள்ளிட்டவை செய்துதர நிதியுதவி பெற உபயதாரர்களை அணுகவும், அறநிலையத் துறை அனுமதியுடன் வரும் மார்ச் 2018 இல் கும்பாபிஷேகம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பொருளாளர் நாகராஜ் ரகுபதி வரவேற்றார். முடிவில் முருகேசன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai