Enable Javscript for better performance
பேராவூரணியில் டெங்கு தடுப்பு பணி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகளை பேராவூரணி வட்டாட்சியர் எல். பாஸ்கர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
    செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் மற்றும் 24 மணிநேர காய்ச்சல் உள்நோயாளி பிரிவு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். மேலும், பைங்கால் மற்றும் சொர்ணக்காடு கிராம பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குளோரினேசன், கொசுப்புழு ஒழிப்பு பணி, நிலவேம்புக் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
    ஆய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலர் செளந்தர்ராஜன், டாக்டர் ரஞ்சித், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப்சிங், அமுதவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai